சனி, 25 ஜூலை, 2009

சிலக்கலூரி பேட்டை


நீங்க இதை படிக்கிறதுக்கு முன்னால ஒரு டிஸ்கி.. இது ஜஸ்ட் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது (உண்மை சம்பவம் தான்!!) எந்த ஒரு தனி மனிதரின் மனதை புண்படுத்தும் நோக்கம் இதில் கிடையாது..

1990 வருடம்.. எனக்கு திருமணம் ஆவதற்கு முன்.. சென்னை அண்ணா நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தோம்.. (5 பேர் நிரந்தர மாகவும், லோக்கல் நண்பர்கள் வந்து போவதுண்டு). இதில் திருமணம் ஆகும்வரை பெண் வாடையே வேண்டாம் என்று வாழ்ந்தவர்கள் நாங்கள் 4 பேர்.. (நம்புங்கய்யா !! அப்படி சந்தேகமா பாக்காதீங்க..) மீதமுள்ள 5 பேர் அது தான் உலகம் என்று முறுக்கிக்கொண்டு தென்னிந்தியா முழுக்க அலைந்தவர்கள்... அப்போது என் நண்பர் ஒருவரின் அண்ணன் சென்னையில் Travels கம்பெனி வைத்து இருந்தார்.. அவருடன் இந்த 5 பேர் கோஷ்டி..ஆந்திராவை நோக்கி புறப்பட்டது.. இந்த பிரயாண த்திற்காக பிரத்தியேக மந்திராலோசனை செய்தார்கள்.. முடிவாக பெத்தாபுரம் வெகு தூரம் என்பதால், அருகில் உள்ள சிலக்கலூரி பேட்டை க்கு செல்வது என்று தீர்மானித்தார்கள்..பிறகு ஒரு சனிக்கிழைமை காலை பூஜை போட்டு..5 men Army (இப்படி சொல்வோமே !!) கிளம்பியது..நண்பரின் அண்ணன் முன் கூட்டியே சொல்லி விட்டார்.. அவர் ஒன்லி Guide மட்டும்.. மேற்படி எதுவும் செய்ய மாட்டார் என்று... செலவு மிச்சம் என்று 5 men Army சந்தோஷப்பட்டது...

ஒரு வழியாக சிலக்கலூரி பேட்டை போயி சேர்ந்தார்கள்.. அங்கே ஒரு Lodge ல் ரூம் போட்டார்கள்.. அந்த Lodge ப வடிவம் உடையது..௨ சகோதரர்களுக்கு சொந்தமானது..ஒவ்வொருவருக்கும் ஒரு டபகுதி.. இங்கே "சரக்கு" கூட்டி வந்தால் அங்கே அந்த சகோதரன் போலீசுக்கு போட்டு குடுத்து விடுவான்.. (Vice Versa) எனவே "Guide" ஆலோசனைப்படி 2 ட விலும் தலா 2 ரூம் போட்டனர்..(எல்லாம் ஒரு Balance செய்வதற்காக தான் ..) ஆயினும்..அன்று இரவு அவர்களின் "லபோ .. லபோ.. லப்பினக்கா.." பயணம் இனிதே தொடங்கியது..இதற்க்கு நண்பரின் அண்ணன் (Guide) தான் காவல்..

இதற்க்கு இடையில்.. தண்ணி பார்ட்டி தொடங்கி நடந்து கொண்டிருக்க.. 5 men Army யிலிருந்து ஒரு மெம்பர் மட்டும் தனியாக ஒரு குவார்ட்டர் , சாப்பாடு (தூக்கு போசியில்) உஷார் பண்ண.., அவரை நன்றாக நாலு சாத்து சாத்தியத்தில்..அவர் சொன்னது.."மச்சான் ! எனக்கும் வரப்போற சரக்குக்கும் சாப்பாடு டா ! !! அதுக்கு ராத்திரில பசிச்சா சோத்துக்கு அலைய முடியாது இல்ல...அதான் இந்த ஏற்பாடு".. என்ன மனித நேயம் பார்த்தீர்களா இவருக்கு ??

பயணம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் வந்தது வினை வேறு வடிவில்.. இந்த ட ட Lodge சகோதரர்களுக்கு வேண்டாத வேறு ஒருவன் போலீசுக்கு போட்டுக்கொடுத்து விட... உடனே ரெய்டு... போலீசை கண்ட அண்ணன் "Guide" மாயமாகிவிட..5 men Army வசமாக மாட்டிக்கொண்டது... "Payment வேறு பண்ணியாச்சு.., சரக்கை திரும்ப அனுப்ப முடியாது" என்று..ஒருவன் அவனுடைய ஜோடியை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு ஓட.., மற்றொருவன் டீயில் கயிற்றை நனைத்து டேம்போரரி தாலிக்கயிறு ரெடி பண்ண...மற்றவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்க... போலீசும் வந்து தொலைக்க.. இரண்டு லோட்ஜ் சொந்தக்காரர்களும்..போலீஸ் பின்னே சரிசெய்வதற்க்காக ஓட...கடைசியில் வந்தது கமிஷனர் என்று தெரிந்த உடனே.. லோட்ஜ் ல் இருந்த அனைத்து ஊழியர்களும்..ஜூட்... கமிஷனர் "சர்ச்" ஆர்டர் கொடுக்க..மேலும் டென்ஷன்....


போலீஸ் ரெய்டு வந்த பின்பு..செய்வதறியாது தவித்த 5 Men Army., திசைக்கொருவராய் பாய்ந்தது... முதலில் மாட்டியவர்..டீ யில் கயிற்றை நனைத்து தாலிக்கயிறு ரெடி பண்ணிக்கொண்டிருந்தவர்...

இவருக்கு A.C விட்ட அறையில்..ஒரு பல் விழுந்து விட்டது.. கூடவே திட்டும் வேறு.. " எந்துக்குரா இக்கட ஓச்சாவா... மஜா சேசெதுக்கு வேறே ஜாகா லேதா ??"

பின்னர் மாட்டியவர்..இருவர்... அதே கவனிப்பு...நான்காமவர் மொட்டைமாடியில் சென்று ஒளிந்து கொள்ள... அங்கே சென்ற கான்ஸ்டபிள் அவரை கண்டு மிரட்ட... கான்ஸ்டபிள் க்கு 100 ரூ கொடுத்து எஸ்கேப் ஆகி விட்டார்..நம் ஆள்...ஐந்தாமவர் தான் இந்த நிகழ்வின் ஹை லைட் ..

முன் கூறிய படி.. "சரக்குக்கு" சாப்பாடு எடுத்து சென்ற நண்பர்..ரெய்டின் போது.. இவரும், சரக்கும்.. உணவருந்திக்கொண்டு இருந்ததால்..நிஜ கணவன், மனைவி என்று நினைத்து போலீசார் விட்டு விட்டு சென்று விட்டார்கள்.. கூடவே., அட்வைஸ் வேறு.. "பாத்தா நல்ல பாமிலி மேன் மாதிரி..இருக்கீங்களே.... தங்க வேற Lodge கிடைக்கலையா ?" ன்னு compliments வேற.....

கமிஷனர் இந்த மாதிரி சொன்ன உடனே..நம் நண்பர் புளகாங்கிதம் அடைந்து விட்டார்...ஒரு வழியா நடு ராத்திரி 1 மணிக்கு..இந்த கூத்து..முடிவுக்கு வர..

எஸ்கேப் ஆனா நண்பரோட அண்ணன் "Guide" திரும்ப வர.. சண்டை ஆரம்பித்தது...வந்ததுக்கு எல்லாம் வேஸ்ட்..ன்னு... திடீர்னு..கணக்கு பாத்தபோது..2 பேர் மிஸ்ஸிங்.. ஒருத்தர் மொட்டை மாடியிலேயே ஐக்கியம் ஆகிவிட.. சாப்பிட்டு விட்டு நண்பரும், சரக்கும் தங்கள் தொழிலில் பிசி ஆகிவிட.. மாட்டி அடி வாங்கி நொந்து பொய் உக்கார்ந்து இருந்த மூவருக்கும், Guide ஐடியா கொடுக்க "போயி அந்த ரெண்டு பேரோட நீங்களும் ஐக்கியமாயிடுங்கடா" ன்னு...கடைசியில்..கையிலிருந்த காசெல்லாம் கரைத்து விட்டு.. ஞாயிறு இரவு..சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள்..

நானும், மாற்ற நண்பர்களும், இவர்களை வீட்டு வாசலிலேயே நிறுத்தி குளிக்காமல் எந்த நாதாரி நாயும் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று சத்தம் போட்டு விட்டு.. நண்பரின் அண்ணனை தேடினோம்...அவர், already எஸ்கேப்..ஆகிவிட.. பின்னர் ஒருநாள் அவருக்கு பூசை வைத்துக்கொள்ளலாம் என்று..விட்டு விட்டோம்.ஆக மொத்தம்.. இந்த ௫ Men Army யின் members அத்தனை பேரும் இன்று அரசு பணியில் இருப்பது தான் சிறப்பு அம்சம்.. (அதான் யார் பேரையும் நான் போடலை..)

இந்த பதிவுகளோட நீதி என்னன்னா.. ஆசை பட்டு கூட ஆந்திரா பக்கம் போயிடாதீங்க... பாஷை தெரியாம , சமாளிக்க முடியாம மாட்டிகிட்டீங்கன்னா.. சங்கு தான்..!!!பின் குறிப்பு : இன்னமும் சில சுவாரசியமான சம்பவங்களும் நடந்ததாக ஒரு மெம்பெர் கூறினார்.. கொஞ்சம் ஓவர் கிளு கிளுப்பா இருந்ததனால்..எழுதலை...

2 கருத்துகள்:

  1. நெம்ப‌ காமெடியா எழுதீருக்கீங்க‌ சார்... ந‌ல்ல‌ ந‌டை இருக்கிற‌து... மேலும் தொட‌ர‌ வாழ்த்துக்க‌ள் ம‌ஞ்ச‌ ஜ‌ட்டி....

    பதிலளிநீக்கு
  2. நிறைய பேருக்கு கருத்துரைகள் வழங்குவதொடு நில்லாமல்,நீங்கள் பதிவு எழுதக்கூடாது?

    பதிலளிநீக்கு